இலங்கையில் பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகளை எதிர்வரும் மாதம் வெளியிடுவதற்கு எதிர்ப்பார்த்துள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
2019 ஆம் ஆண்டு உயர்தரப்பரீட்சை பெறுபேறுக்கமைய பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதல்வாரம் வெளியிடப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியிடும் நடவடிக்கை கொரோனா வைரஸ் பரவல் ஏற்பட்டதன் காரணமாக தற்காலிகமாக பிற்போடப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

