நாட்டிலுள்ள பல்கலைக்கழகங்களில் கல்வி பயிலும் மாணவர்களில் 70 வீதமானோர் பெண்கள் என விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் தெரிவித்துள்ளார்.
கொழும்பு கலதாரி ஹோட்டலில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
எமது பாடசாலைகளில் இன்னும் காணப்படுவது கற்பித்தல் முறைமையாகும். வளர்ச்சியடைந்த நாடுகளில் கற்றல் முறைமையே காணப்படுகின்றது. உலகின் சிறந்த கல்வி முறைமை கொண்ட நாடுகளில் சிங்கப்புர் காணப்படுகின்றது. அந்த நாட்டில் அப்படி என்ன விசேடமாக இருக்கின்றது?
ஈரான் 50 லட்சம் விஞ்ஞான ஆய்வு கூடங்களை அமைத்து நனோ தொழில்நுட்பத்தை கற்பித்து வருகின்றது. எமது பல்கலைக்கழகங்கள் தற்பொழுது 7 மாதங்களாக மூடப்பட்ட நிலையில் உள்ளன. எமது விஞ்ஞான ஆய்வு கூடங்களில் சிலந்திகள் வலை பின்னியுள்ளன. இவ்வாறுள்ள நாம் முன்னேற்றம் காண்பது என்பது சந்தேகமாகவே உள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.