ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக இழுத்து மூட வலியுறுத்தி போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலியானோர் எண்ணிக்கை 8 ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலையில் திரேஸ்புரம் பகுதியில் மீண்டும் ஒரு துப்பாக்கிச் சூட்டை போலீசார் நடத்தினர். இதில் பெண் ஒருவர் பலியானார். தற்போதைய நிலையில் 9 பேர் துப்பாக்கிச் சூட்டுக்கு பலியாகி உள்ளனர்.
