பலாலி இராணுவ பயிற்சி முகாமில் தூக்கில் தொங்கிய நிலையில் இராணுவச் சிப்பாயின் சடலம் மீட்கப்பட் டுள்ளது. அவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்திருக்கலாம் என்று பலாலி பொலிஸார் தெரிவித்தனர்.
அரியரத்ன என்ற 22 வயதுடைய சிப்பாயே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளை பலாலி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

