பாவனைக்கு உதவாத துப்பாக்கியின் உதிரிகளைக் கொண்டு, மரப்பலகைகளைப் பயன்படுத்தி, துப்பாக்கி தயாரிக்க முயன்ற ஒருவர் சம்மாந்துறை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சம்மாந்துறை பிரதேசத்தைச் சேர்ந்த 43 வயது மதிக்கத்தக்க ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் என, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அந்தவகையில், பாழடைந்த வீட்டிலிருந்து, மூன்று கிழமைக்கு முன்னர் கண்டெடுக்கப்பட்ட பையிலிருந்த, பாவனைக்குதவாத துப்பாக்கியின் உதிரிப் பாகங்களை வைத்தே, இவர் துப்பாக்கி தயாரிக்க முயன்றுள்ளார் என்று அறிய முடிகிறது.
சம்மாந்துறைப் பொலிஸார், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.