யாழ். பருத்தித்துறை பொலிஸ் பிரிவில் பாடசாலை மாணவர்களின் துவிச்சக்கர வண்டிகளைத் திருடி வந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரிடமிருந்து 10 துவிச்சக்கர வண்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.
பருத்தித்துறை சுப்பர்மடத்தைச் சேர்ந்த 45 வயதுடைய ஒருவரே இன்று கைது செய்யப்பட்டார்.
இதையடுத்து விசாரணைகளில் 20 துவிச்சக்கர வண்டிகளைத் திருடி விற்பனை செய்துள்ளதாக சந்தேக நபர் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
அவற்றில் 10 துவிச்சக்கர வண்டிகளே கைப்பற்றப்பட்டுள்ள நிலையில். ஏனையவை தேடப்பட்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – யூடியூப் YouTube | [email protected]