கா.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றச் சென்ற தனது மகள் காணாமல் போயுள்ளார் என்று மாணவியின் தந்தை, சியாம்பலாண்டுவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
சியாம்பலாண்டுவப் பகுதியின் தொம்பகாவெலையைச் சேர்ந்த காயத்திரி லக்பிய சேனாதீர என்ற 15 வயதுடைய மாணவியே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.
பரீட்சை எழுதுவதற்காக 11 ஆம் திகதி காலை வழமை போல் பெற்றோரை வணங்கி ஆசி பெற்று வீட்டிலிருந்து வெளியேறிய அந்த மாணவி,
பரீட்சை முடிந்த பின்னரும் வீடு திரும்பவில்லை இதனால் பதற்றமடைந்த தந்தை சியாம்பலாண்டுவை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இதனைத் தொடந்து பொலிஸார் விசாரணையில் இறங்கியுள்ளனர்.

