நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தற்பொழுது இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தினால் நடாத்தப்பட்டு வரும் பரீட்சைகளுக்கு தோற்றும் மாணவர்களில், சீரற்ற காலநிலை காரணமாக பரீட்சை மண்டபத்துக்கு தாமதித்து வரும் பரீட்சார்த்திகளுக்கு பரீட்சை எழுதுவதற்கான அனுமதியை வழங்க பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
நாட்டின் பல பகுதிகளில் நிலவும் அதிக மழையுடனான காலநிலையை கருத்திற்கொண்டு பரீட்சை எழுதுவதற்கு தாமதித்து வரும் மாணவர்களுக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அவ்வாறு தாமதித்து பரீட்சை எழுத வருகை தரும் மாணவர்களுக்கு பரீட்சை எழுத மேலதிக காலத்தை வழங்குமாறும் திணைக்களம் அறிவித்துள்ளது.
திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவவட்டங்களில் நிலவும் மழையுடனான காலநிலையை கருத்திற்கொண்டு இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த குறிப்பிட்டுள்ளார்.
பிரிவேனா கல்வியின் இறுதியாண்டு பரீட்சை மற்றும் அரச முகாமைத்துவ பிரிவின் இறுதியாண்டு பரீட்சையில் தோற்றும் இரண்டாம் நிலை மாணவர்களின் திறனை மேம்படுத்தி பரீட்சை என்பன தற்பொழுது நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

