க.பொ.த. உயர் தரப் பரீட்சையின் பெறுபேறு மீளாய்வுக்கான விண்ணப்பங்கள் பரீட்சைகள் திணைக்களத்தினால் கோரப்பட்டுள்ளன.
விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படும் இறுதித் திகதி எதிர்வரும் 2020 ஜனவரி 17 என அறிவிக்கப்பட்டுள்ளது.
பாடசாலை பரீட்சார்த்திகளுக்கான மீளாய்வு விண்ணப்பப்படிவங்கள், பெறுபேற்று ஆவணங்களுடன் அதிபர்களுக்கு அனுப்பி வைக்கப்படும் எனவும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பான விபரங்களை பத்திரிகைகளில் வெளியிடப்படும் எனவும் திணைக்களம் கூறியுள்ளது. பெறுபேறுகள் தொடர்பான மேலதிக விபரங்கள் தேவைப்படுவோர், 011 278 4208 அல்லது 011 278 4537 அல்லது 011 3188 350 அல்லது 011 314 0314 எனும் இலக்கங்களை தொடர்பு கொள்ள முடியும் எனவும் பரீட்சைகள் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
தான் எதிர்பார்த்த பெறுபேறு கிடைக்காதவர்களும், தனக்கு புள்ளிகள் அதிகரித்திருக்க வேண்டும் என்ற நம்பிக்கையிலுள்ளவர்களும் பெறுபேறு மீளாய்வுக்காக விண்ணப்பிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

