பரிஸ் ஆடரம்பர் கைக்கடிகாரம் ஒன்று மிக நூதனமான முறையில் திருடப்பட்டுள்ளது. 24,000 யூரோக்கள் மதிப்புள்ள கைக்கடிகாரமே திருடப்பட்டுள்ளது.
நபர் ஒருவர் தனது ஆடம்பர கைக்கடிகாரத்தை விற்பனை செய்வதாக இணையத்தளத்தில் பகிர்ந்திருந்தார். பின்னர் நபர் ஒருவர் தொடர்புகொண்டு கைக்கடிகாரத்தை தாம் விலைக்கு வாங்குவதாக குறிப்பிட்டு, Père-Lachaise மெற்றோ நிலையத்துக்கு அருகே உள்ள வீதி ஒன்றுக்கு வரவழைத்துள்ளார். ஆனால் கைக்கடிகாரத்தை வாங்கவந்த நபர், 24,000 யூரோக்கள் மதிப்புள்ள அந்த கைக்கடிகாரத்தை திருடிக்கொண்டு ஓடியுள்ளார். காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, இரண்டாம் வட்டார காவல்துறையினர் விசாராணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அதேவேளை, பரிஸ் 8 ஆம் வட்டாரத்தில் மேலுமொரு திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. 8,500 யூரோக்கள் மதிப்புள்ள கைக்கடிகாரம் ஒன்று திருடப்பட்டுள்ளது. ஆனால் காவல்துறையினர் குற்றவாளியை சிறிது நேரத்துக்குள்ளாக கைது செய்துள்ளனர். இணையத்தளமூடாக தனிநபர்கள் விற்பனைகளை மேற்கொள்ளும்போது இதுபோன்ற திருட்டுக்கள் அதிகமாக இடம்பெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.