மதுபான விடுதி நிர்வாகியிடம் இலஞ்சமாக பணம் பெற்றுக்கொண்ட காரணத்துக்காக கைது செய்யப்பட்டிருந்த காவல்துறை அதிகாரி ஒருவருக்கு முன்-தடுப்பு சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
பரிஸ் 18 ஆம் வட்டாரத்தில் உள்ள காவல்நிலையத்தில் பணி புரியும் காவல்துறை அதிகாரி ஒருவர், கடந்த ஏப்ரல் 18 ஆம் திகதி கைது செய்யபட்டிருந்தார். அதன் பின்னர் முன் விசாரணைகளுக்காக அவர் காவல்நிலையத்தில் சிறைவைக்கப்பட்டிருந்தார். அதைத் தொடர்ந்து. விசாரணைகள் முடிவுக்கு வந்ததும் ‘தனது அதிகாரத்தை பயன்படுத்தி மதுபான விடுதி நிர்வாகி ஒருவரிடம் இலஞ்சம் பெற்ற’ குற்றத்துக்காக அவருக்கு முன்-தடுப்பு சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
குறித்த காவல்துறை அதிகாரியை IGPN அதிகாரிகள் கைது செய்தனர். இத்தகவல் நேற்று திங்கட்கிழமை வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.