2020ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் பயணிகளை ஏற்றிச் செல்லும் பேருந்துகளுக்கு புதிய கட்டுப்பாடு விதிக்கப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
அதற்கமைய பேருந்துகளில் இயக்கக்கூடிய பாடல்களின் பட்டியலை பேருந்துகளுக்கு வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக துறைசார் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
பேருந்துகளில் பலத்த சத்தத்துடன் பாடல்கள் இசைக்கப்படுவதை தடுக்கும் அரசாங்கத்தின் முயற்சியின் ஒரு பகுதியாய இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக அmவர் தெரிவித்தார்.
இது தொடர்பாக தேசிய போக்குவரத்து ஆணையம், பொதுமக்களிடமிருந்து சுமார் 15,000 முறைப்பாடுகள் கிடைக்க பெற்றுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
புதிய விதிமுறையின்படி, தனியார் மற்றும் அரசுக்கு சொந்தமான பேருந்துகள் இசைத்தட்டுகள் அல்லது வானொலிகளை இயக்க தடை விதிக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
அத்துடன் பேருந்துகளில் வானொலியின் செயற்பாடுகளுக்கு கட்டுப்பாடு விதிக்கப்படும் என குறிப்பிடப்படுகின்றது.

