Monday, August 25, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்க அரசாங்கம் தயார் : ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க

March 1, 2025
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

புதிய சட்டக் கட்டமைப்பின் மூலம் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்க அரசாங்கம் தயாராக இருப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

வரலாற்றில் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இனவாதம் மற்றும் அடிப்படைவாதம் அமைந்திருந்தது என்றும், இலங்கையில் மீண்டும் இனவாதம் மற்றும் அடிப்படைவாதம் தலைதூக்க தற்போதைய அரசாங்கம் அனுமதிக்காது என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

புதிய சட்டக் கட்டமைப்பின் மூலம் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்க அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (28) நடைபெற்ற  2025 வரவுசெலவுத் திட்டத்தின் பாதுகாப்பு, பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சின் செலவினங்கள் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். 

பொருளாதார நெருக்கடி மற்றும் நாட்டில் பாதுகாப்பு இல்லை என்ற எண்ணத்தை உருவாக்குவதன் மூலமோ, பொதுமக்கள்  கிளர்ச்சியை உருவாக்குவதன் மூலமோ, அரசாங்கத்தை கவிழ்க்க எதிர்க்கட்சிகள் காணும் கனவுக்கு ஒருபோதும் இடமளிக்கப்பட மாட்டாது என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

தற்போதைய அரசாங்கம் காட்டுமிராண்டித்தனத்தின் சகாப்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்து, நாகரிகத்திற்கு வழி வகுத்துள்ளது என்றும், முடிந்தால் தற்போதைய அரசாங்கத்தின் நாகரிகத்தை மிஞ்சிச் செல்லுமாறும் எதிர்க்கட்சிகளுக்கு ஜனாதிபதி சவால் விடுத்தார்.

அவ்வாறு இல்லாமல்  பழைய  அரசியலிலே இருந்தால்  அரசியலை விட்டு விலகுவதை தடுக்க முடியாதெனவும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.  

பாதாள உலகின் குற்ற குழுக்களுக்கு தற்போதைய அரசாங்கத்தின் எந்தவொரு உறுப்பினரினதும்  ஆசிர்வாதம் கிடைக்காதெனவும் ஜனாதிபதி உறுதியளித்தார். 

இலங்கை இராணுவத்தையும் பொலிஸையும் தொழில்சார்புடைய இராணுவமாகவும் பொலிஸாகவும் மாற்றுவதாக உறுதியளித்த ஜனாதிபதி, பாதுகாப்பு துறையின் எந்தவொரு இடமாற்றத்தையும் நட்பு மற்றும் அரசியல் அடிப்படையில் செய்யப்போவதில்லை என்றும் குறிப்பிட்டார்.

முன்னாள் பாதுகாப்பு படைகளின் பிரதானிக்கு  ஏழு தடவைகள் சேவை நீடிப்பு வழங்கப்பட்டிருப்பதாகவும், சகாக்களுக்கும் நண்பர்களுக்கும் நியமனங்களை வழங்குவதால் புதிய பயணத்தை செல்ல முடியாது என்பதால் புதியவர்களுக்கு நியமனங்கள் வழங்கியிருப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். 

நபரொருவருக்கு பக்கச் சார்பான  இராணுவத்திற்கு பதிலாக நாட்டுக்கு சார்பான இராணுவம் ஒன்றை உருவாக்கவும் தொழில்சார்பு தன்மையை மேம்படுத்தவும் தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுப்பதாகவும்  ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

காலத்தால் மறைந்திருக்கும் குற்றச்செயல்களுக்கு நீதி மற்றும் நியாயத்தை வழங்க தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் எனவும், அதற்காக எடுக்க வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் தற்போதைய அரசாங்கம் எடுக்குமெனவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.

பாதுகாப்பு துறையின் கட்மைப்பின் மீதான நம்பிகையின் அடிப்படையிலேயே ஒழுக்கம் கட்டியெழுப்பப்படும் என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, ஒழுக்கயீனத்தின் பாதாளம் வரையில் சென்றுள்ள இந்த நாட்டை மீண்டும் ஒழுக்கத்தை  நோக்கி கொண்டுச் செல்ல தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்றும் தெரிவித்தார்.     

பொருளாதார நெருக்கடியை  ஏற்படுத்தி அதிகாரத்தை  பெற்றுக்கொள்ளும்  எதிர்க்கட்சியின்  கனவு தற்போது முற்றுப்பெற்றுள்ளதென சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, தேசிய பாதுகாப்பு தொடர்பில் நெருக்கடியிருப்பதாக காண்பித்து  ஆட்சி  அதிகாரத்தை பெற்றுக்கொள்ளும் முயற்சியில் எதிர்கட்சி  தற்போது இருக்கின்றதா என்ற சந்தேகம் எழுவதாகவும்  கூறினார்.

இம்மாதத்தில் நடந்த ஐந்து குற்றச் செயல்களை விசாரணை செய்யும்போது ஐந்து குழுக்களினால் அந்த குற்றச் செயல்கள் செய்யப்பட்டுள்ளதெனவும், விசாரணைகள் முன்னெடுக்கப்படும் போது தமது பக்கம் விசாரணைகள் வருவதை குற்றச் செயல்களை செய்வோர் அறிந்துகொள்வதாகவும், அவ்வாறு பல குற்றக் குழுக்கள் ஒரே சமயத்தில் இயங்குவது சூழ்ச்சியாக இருக்குமா என்ற சந்தேகம் எழுவதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இந்த சூழ்ச்சியை அறிந்துகொண்டு  அதனை முடக்குவதற்கு  நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார். 

அதேபோல் சூழ்ச்சிகளால்  ஆட்சி மாற்றம் செய்த காலம் முடிந்துவிட்டதாகவும், ஒழுக்கத்தினால் அரசாங்கமொன்றை கட்டியெழுப்ப முடியுமெனவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சுட்டிக்காட்டினார்.

அரசாங்க நிறுவனங்கள் மற்றும் அரசியல் அதிகார தரப்பை குற்ற குழுக்கள் அற்றதாக்கும் சமூகத்தை கட்டியெழுப்புவதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். 

பாதுகாப்பு  துறையினரின் வெளிநாட்டு பயிற்சிகளுக்கான கொடுப்பனவுகளை அதிகரிக்க இம்முறை வரவு செலவு திட்டத்தில் நிதி ஒதுக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 

விமானப்படை மற்றும்  கடற்படைக்கு  அவசியமான  ஊர்திகளை   கொள்வனவு செய்ய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாகவும், பொலிஸ் திணைக்களத்தின் வசதிகளை மேம்படுத்த 1000  மில்லியன் ரூபாய்களை  ஒதுக்கீடு செய்திருப்பதாகவும் ஜனாதிபதி  தெரிவித்தார். மேலும், விமானப்டைக்கும் பொலிஸூக்கும் தலா 10,000 பேரை ஆட்சேர்ப்பு செய்ய இம்முறை வரவு செலவு திட்டத்தில் பரிந்துரைக்கப்பட்டிருப்பதாகவும்  ஜனாதிபதி  சுட்டிக்காட்டினார்.

Previous Post

அடுத்த கட்ட கடனுதவியை இலங்கைக்கு வழங்க சர்வதேச நாணய நிதியம் அங்கீகாரம் !

Next Post

‘ஆயுதங்களின் வடிவங்கள் மாறும்.. போர் தொடரும்..’ என கர்ஜிக்கும் ‘தல்வார்’ பட அறிமுக காணொலி

Next Post
‘ஆயுதங்களின் வடிவங்கள் மாறும்.. போர் தொடரும்..’ என கர்ஜிக்கும் ‘தல்வார்’ பட அறிமுக காணொலி

'ஆயுதங்களின் வடிவங்கள் மாறும்.. போர் தொடரும்..' என கர்ஜிக்கும் 'தல்வார்' பட அறிமுக காணொலி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures