உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்களுடன் தொடர்புடைய துருக்கி பயங்கரவாதக்குழுவொன்றுடன் தானும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனும் கொடுக்கல் வாங்கல் நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதாக சிங்கள பத்திரிகையொன்றில் வெளியிடப்பட்டிருக்கும்செய்தியை திட்டவட்டமாக மறுப்பதாக ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹசிம் தெரிவித்தார்.
இது தேர்தலை மையமாக கொண்டு தனக்கு எதிராக முன்னெடுக்கப்படும்சதியெனவும் வர்ணித்த அவர் இதற்கு எதிராக தான் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் இது தொடர்பில் விசாரணைளை முன்னெடுப்பதற்காககுற்றப்புலனாய்வு பிரிவில் முயைப்பாடொன்றை அளிக்கவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

