பனை வளத்தைப் பாதுகாக்கக் கோரி விழிப்புணர்வு ஊர்வலம் வவுனியா நெளுக்குளம் பகுதியில் இன்று நடைபெற்றது
”எமது நிலத்தின் பாரம்பரிய தாவரமான பனைமரம் அழிந்து கொண்டு வருகிறது எனவே எமது இனத்தின் அடையாளமாக இருக்கும் பனை மரத்தை நாம் பாதுகாப்பதுடன் அதனை மெருகூட்டி ஒரு தற்சார்பு பொருளாதாரத்தை ஏற்படுத்தவதுடன்,பனை வளத்தை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல அனைவரும் அணிதிரள்வோம்” என்ற நோக்குடன் ஊர்வலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த ஊர்வலம் ஊர்வலம் உயிலங்குளம் பகுதியில் உள்ள கட்டைக்காடு எனும் பனை மரங்கள் அதிகம் நிறைந்த பிரதேசத்தில் நிறைவடையவுள்ளது.
அங்கு நொங்கு குடித்தல் ,சீக்காய் தேய்த்து குளித்தல், மற்றும் சிறுவர்களுக்கான நொங்கு வண்டில் உருட்டி விளையாடும் நிகழ்வு ,மற்றும் மக்களுக்கு பனை சார்ந்த விழிப்புணர்வுகளை எடுத்துரைத்தல் போன்ற நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
வவுனியாவில் சுயாதீன தமிழ் இளைஞர் அமைப்பினரால் இந்த ஊர்வலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.