திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட போகாவத்தையில் உள்ள பால்சேகரிப்பு நிலையத்தில் இருந்து முல்லேரியா பகுதிக்கு 9700 லிற்றர் பால் ஏற்றி சென்ற பாரிய பவுசர் ஒன்று நேற்றையதினம்(15.02.2018) வியாழக்கிழமை இரவு 07.30 மணி அளவில் கொட்டகலை ஸ்டொனிக்கிழிப் சோட்கட்ட வீதியில் குடைசாயந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் எவருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லையெனவும் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை திம்புள்ள பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.