பதுரலிய பாடசாலைக் கட்டிடமொன்றுக்கு அருகில் இருந்து 13 கைக்குண்டுகளை பதுரலிய பொலிஸார் மீட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாடசாலைக் கட்டிடமொன்றுக்கு அருகில் இருந்த சந்தேகத்திற்கிடமான பொதியொன்று குறித்து பாடசாலை காவலில் ஈடுபடும் சிற்றூழியர் சோதனையிட்ட போதே இவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
சிற்றூழியர் நேற்றிரவு உணவு எடுத்துக் கொண்டு வரும் போதே இந்த பொதியைக் கண்டுள்ளார். இந்த சந்தர்ப்பத்தில் பாடசாலையில் இன்னும் இருவர் காவலில் ஈடுபட்டிருந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
சிற்றூழியர் இது தொடர்பில் அதிபருக்கு அறிவித்தல் விடுத்த பின்னர், அதிபர் ஊடாக பதுரலிய பொலிஸாருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, இராணுவத்தினருடன் வருகை தந்த பொலிஸார் அதனை பாதுகாப்பாக அகற்ற நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலதிக விசாரணைகளை பதுரலிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.