கடந்த டிசம்பர் மாதம் துணை ஜனாதிபதியான சிரில் ராமபோசா, ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
இதனால் அவர் 2019 பொதுத்தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்படுவார் என தெரிகிறது.
இதையடுத்து ஜேக்கப் ஜூமாவை பதவியில் இருந்து நீக்குவது தொடர்பாக, கட்சியின் தேசிய செயற்குழுவில் வாக்கெடுப்பு நடத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இத்தகவலை கட்சியின் பொதுச்செயலாளர் ஏஸ் மகாஷுலே தெரிவித்தார்.
இந்நிலையில், ஜேக்கப் ஜூமா தனது ஜனாதிபதி பதவியை உடனடியாக ராஜினாமா செய்வதாக இன்று அறிவித்துள்ளார்.
இந்த தகவலை அவரே தொலைகாட்சி மூலம் நாட்டு மக்களிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து துணைஜனாதிபதி சிரில் ராமபோசா இன்றோ, நாளையோ அதிபராக பதவி ஏற்பார் என கூறப்படுகிறது.