கிறிஸ்மஸ் பண்டிகைக் காலப் பகுதியில் அதிவேக நெடுஞ்சாலையில் வாகன நெரிசலை சமாளிக்க நெடுஞ்சாலை வசதிகளை விரிவுபடுத்துவதற்கு வீதி அபிவிருத்தி அதிகார சபை திட்டமிட்டுள்ளது.
கடந்த பண்டிகைக் காலப்பகுதிகளில், பெறப்பட்ட அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு தடையின்றி பொதுமக்களுக்கு வசதிகளை வழங்குவதே இதன் நோக்கம் எனவும் அதிகார சபை அறிவித்துள்ளது.
இதன்படி, பின்னதூவ, கொடகம, கொட்டாவ, கடவத்த உள்ளிட்ட வாகன நுழைவாயில் இடங்களுக்கு அப்பால், வாகனங்களின் எண்ணிக்கையை கவனத்திற்கொண்டு, மேலதிக நுழைவாயல் திறக்கப்படும் என்றும் அதிகார சபையின் மேலதிக பணிப்பாளர் நாயகம் எஸ்.ஓப்பநாயக்க தெரிவித்துள்ளார்.
சீதுவை, ஜாஎல, கட்டுநாயக்க வரையில் செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை நாளாந்தம் 12 ஆயிரத்திலிருந்து 15 ஆயிரம் வரை அதிகரித்திருப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

