பணவீக்கம் 70 வீதமாக அதிகரிக்கலாம் என மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்துள்ளார்.
பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம் அதிக பணவீக்கம் காணப்பட்டால் எவரும் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட முடியாத நிலையேற்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நலிந்தவர்களும் ஏழைகளும் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என மத்திய வங்கி ஆளுநர் தொவித்துள்ளார்.