ஹமில்டன் பகுதியில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹமில்டனில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பெண்ணொருவரின் பணப்பை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில் குறித்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.ரீவியின் உதவியுடன் சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.
கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேகநபர் ஹமில்டனில் தேடப்பட்டு வரும் குற்றவாளிகளில் ஒருவர் எனவும் குறிப்பிடப்படுகின்றது.
இந்தநிலையில் கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேகநபரிடம் தொடர்ச்சியாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

