வத்தளை, ஹுனுப்பிட்டிய பகுதியில் இன்று (11) அதிகாலை பாதுகாப்புப் படையினரின் சமிக்ஞையை மீறிப் பயணித்த இரு வாகனங்களின் மீது கடற்படையினர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில், ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றுமொருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஹுனுப்பிட்டிய பகுதியில் அமைந்துள்ள கடற்படையினரின் சோதனைச் சாவடியில் குறித்த இரு வாகனங்களையும் கடற்படையினர் நிறுத்துமாறு சமிக்ஞை வழங்கியுள்ளனர். இருப்பினும், கடற்படையினரின் கட்டளையை மீறி அவ்விரு வாகனங்களும் பயணித்த போதே ர் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் லெப்டினட் கொமாண்டர் இசுரு சூரியபண்டார தெரிவித்துள்ளார்.

