தமிழ்நாட்டு அரசியலில் ஏற்கெனவே பல பரபரப்பான நிகழ்வுகள் நடந்து வருகிறது. இதற்கு நடுவில் ரசிகர்களை சந்தித்த ரஜினி அரசியல் பற்றி பேசி அரசியல்வாதிகளிடையே மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
இந்த நிலையில் ரஜினி அரசியல் பிரவேசம் குறித்து பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியம் சுவாமி பேசும்போது, ரஜினிக்கு பாஜக கட்சியில் இடம் கொடுக்கக் கூடாது. மேலும் அவரிடம் உறுதியான கருத்து கிடையாது.
ஒருநாள் ஒன்றை சொல்வார், அடுத்த நாள் அதை மாற்றிப் பேசுவார். ஒருநாள் ஜெயலலிதாவை எதிர்த்து பேசுவார், மறுநாள் அவருக்கே ஆதரவை தெரிவிப்பார். ரஜினி அரசியல் சரியாக செய்ய முடியாததற்கு காரணம், அவருக்கு படிப்பறிவு கிடையாது என்பதுதான் என்று கூறியுள்ளார்.