இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழையும் வெளிநாட்டு படகுகளிடமிருந்து கூடிய தொகை தண்டப் பணத்தை அறவிடுவதற்கான சட்ட மூலமொன்று கொண்டுவரப்படவுள்ளதாக கடற்தொழில் மற்றும் நீரியல்வள அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இதன்படி, சட்டவிரோத படகுகளிடமிருந்து 60 இலட்சம் முதல் 17.5 கோடி ரூபா வரை தண்டபணம் அறிவிடப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் படகில் மீன்பிடி உபகரணங்கள் போன்றவற்றை வெளியில் வைத்திருந்தால் 40 இலட்சம் முதல் 15 கோடி வரை தண்டபணம் அறவிடவுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.