ஜனாதிபதியையும் அரசாங்கத்தையும் ஆட்டுவிக்கும் பசிலின் செயற்பாடு தொடர்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
கட்டுகஸ்தோட்டை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
எந்த மாற்றமும் ஏற்படாது

பசில் ராஜபக்ச இலங்கைக்கு திரும்பினாலும் நாட்டில் எந்த மாற்றமும் ஏற்படாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் ஜனாதிபதியும் அரசாங்கமும் அவர் கையில் இருப்பதையே அவரது வருகை காட்டுவதாக அவர் தெரிவித்தார்.
இதற்கு முன்பும் பசில் ராஜபக்ச வந்தபோது, அலாவுதீன் விளக்கை கொண்டு வருவது போல் அவர் வந்தாலும், நிதியமைச்சராகி நாடு வங்குரோத்து ஆனது தான் நடந்தது.