ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரின் தேர்தல் விஞ்ஞாபனத்தை தயாரிப்பது தொடர்பாக பங்காளி கட்சிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தப்பட இருப்பதாகவும் இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் அடுத்த வாரம் இடம்பெறும் என்றும் ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.
குறித்த தேர்தல் விஞ்ஞாபனத்தில் வடக்கு– கிழக்கு மக்களின் காணி பிரச்சினைக்கு முடிவுகாணுதல், தோட்ட தொழிலாளர்களின் நலன் சார்ந்த விடயங்கள், வேலையில்லாப் பிரச்சினையை தீர்க்கும் வழிவகைகள், இளைஞர்களின் பிரச்சினைக்கு முன்னுரிமை வழங்கல் உள்ளடங்களாக பல முக்கிய அம்சங்கள் சேர்த்துக் கொள்ளப்படவிருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளருக்கான தேர்தல் விஞ்ஞாபனத்தை தயாரிப்பது தொடர்பாக கூட்டு கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகின்றது.

