Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பகிடி வதைக்கு 10 வருட கடூழியச் சிறை, சட்டம் அமுல்

July 31, 2018
in News, Politics, World
0

பகிடிவதைகளில் ஈடுபடும் சகல பல்கலைக்கழக மாணவர்களுக்கும் மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் பிணைவழங்குவதற்கும் சட்டத்தில் இடம் வழங்கப்படவில்லையெனவும், குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட ஒருவருக்கு 10 வருட கடூழியச் சிறைத்தண்டனை விதிக்க முடியும் எனவும் உயர்கல்வி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.

பல்கலைக்கழகங்களில் பகிடிவதையில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுப்பது தொடர்பில் சட்டத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருப்பதாகவும் இவ்வாறான சம்பவங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறும் சகல பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவித்தல் விடுத்துள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

கல்வி நிறுவனங்களில் பகிடிவதைகள் மற்றும் ஏனைய வன்முறைகளிலிருந்து பாதுகாப்பது தொடர்பான 1998 ஆண்டு 20ஆம் இலக்க சட்டத்தின் கீழ் இந்த உத்தரவைப் பிறப்பித்திருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவில் நேற்றுய(30) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அமைச்சர் விஜயதாச ராஜபக்‌ஷ இந்த விடயங்களைக் குறிப்பிட்டார்.

பகிடிவதைக்கு எதிரான சட்டம் இதுவரை முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை. தற்பொழுது இதனை முழுமையாக நடைமுறைப்படுத்தியுள்ளோம். இந்தச் சட்டத்துக்கு எதிராக நடந்துகொள்ளும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, சகல பல்கலைக்கழக உபவேந்தர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆகியோருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் மேலும் கூறினார்.

Previous Post

ஜெயலலிதா வேடத்தில் நடிக்க விரும்பும் த்ரிஷா

Next Post

பல்கலை மாணவர்களின் ஆர்ப்பாட்டங்களின் திரைமறைவில் வேறு குழு- விஜேதாச

Next Post

பல்கலை மாணவர்களின் ஆர்ப்பாட்டங்களின் திரைமறைவில் வேறு குழு- விஜேதாச

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures