நோர்வே மன்னர் ஹரோல்ட் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
85 வயதான மன்னர் ஹரோல்ட், தொற்று ஒன்றின் காரணமாக அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனவும் அவரின் உடல்நிலை ஸ்திரமாக உள்ளது எனவும் நோர்வே அரண்மனை இன்று தெரிவித்துள்ளது.
ஒஸ்லோ பல்கலைக்கழக வைத்தியசாலையில் அவர் அனுதிக்கப்பட்டுள்ளார். சில தினங்கள் அவர் வைத்தியசாலையில் தங்கியிருப்பார் எனவும் அரண்மனை தெரிவித்துள்ளது.
மன்னர் ஹரோல்ட் அண்மைக்காலமாக ஆரோக்கிய பாதிப்புகளை எதிர்கொண்டார். 2021 ஆம் அண்டு அவருக்கு முழங்கால் சத்திரசிகிச்சை செய்யப்பட்டது, கடந்த மார்ச் மாதம் அவர் கொவிட்19 தொற்றுக்குள்ளாகியிருந்தார்.