தீச்சம்பவத்தில் சேதமடைந்த நோட்ர டாம் தேவாலயத்தை மறுசீரமைக்கும் பணிக்குச் சீனா கைகொடுக்கப்போகிறது. இவ்வாண்டு ஏப்ரல் மாதம் 15ஆம் தேதி சேதமடைந்த அந்த தேவாலயத்தைப் புனரமைப்பதற்கான இருநாட்டு கூட்டுறவுத் திட்டத்தை சீனாவும் பிரான்சும் இணைந்து அறிவித்துள்ளன.
இதன் தொடர்பான ஒப்பந்தம் ஒன்று சீன அதிபர் ஸி ஜின்பிங், பிரஞ்சு பிரதமர் இமானுவெல் மக்ரோன் ஆகியோர் முன்னிலையில் நேற்று கையெழுத்திடப்பட்டது.
சீனாவிலிருந்து கலாசார மரபுடைமை நிபுணர்களைக் கொண்டுள்ள ஒரு குழு பாரிஸ் நகருக்குச் சென்று தேவாலய இடத்தில் பணிபுரியத் தொடங்கும் என அந்த ஒப்பந்தம் குறிப்பிடுகிறது.
2024ஆம் ஆண்டில் கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகள் தொடங்குவதற்குள் தேவாலய புனரமைப்புப் பணிகள் நிறைவடையும் என்று திரு மக்ரோன் முன்னதாகக் கூறியிருந்தார்.

