நைஜீரியாவின் கோகி மாநிலத்தின் தலைநகரான லோகோஜா நகரில் நேற்று புதன்கிழமை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நேற்று காலை எரிபொருள் ஏற்றி வந்த பவுசர் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து வேறொரு வாகனம் மீது மோதியது.
இதனால் எரிபொருள் பவுசர் வெடித்ததில் அருகிலிருந்த 30 க்கும் மேற்பட்டோர் பலியாகினர்,
இச்சம்பவத்தில் அங்கிருந்த 10 க்கும் மேற்பட்ட வாகனங்கள் விபத்தில் சிக்கியது. இதையடுத்து அங்கு விரைந்த பொலிஸார் மற்றும் மீட்புப் படையினர் மீட்பு நடவடிக்கைகளை ஆரம்பித்தனர்
இறந்தவர்கள் பலரின் உடல்கள் அடையாளம் காணமுடியாத அளவுக்கு எரிந்துள்ளன என லோகோஜா நகர பொலிஸ் பேச்சாளர் வில்லி அயா தெரிவித்துள்ளார்.
2019 ஆம் ஆண்டில் அதே இடத்தில் ஏற்பட்ட விபத்தில் 25 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

