நேர்மையின் அழகன், உழைப்பின் அடையாளம் திரு கிருபா பிள்ளை அவர்களின் பிறந்த நாளாகிய இன்று அவருக்கு இனிய வாழ்த்துக்களை ஈஸி24நியூஸ் குழுமம் தெரிவித்து நிற்பதில் பெரு மகிழ்வடைகிறது.
வேர்க்காமல் விளையாட முடியாது, விமர்சனம் இல்லாமல் வாழ முடியாது என்றால் போல் பல சவால்கள், நெருக்கடிகள், போராட்டங்கள் கடந்து உலகத் தமிழ் ஊடகப் பரப்பில் ஒரு ஊடகப் போராளியாக கிருபா பிள்ளை செயற்பட்டு வருகிறார்.
ஓடுக்கி அழிக்கப்படும் ஈழ மக்களுக்காக குரல் கொடுப்பதில் நேர்மையின் அழகனாக திகழும் இவர், புலம்பெயர் தேசங்களில் பல வெற்றி நிகழ்வுகளை நடாத்தி சாதனை நாயகனாகவும் கருதப்படுகிறார்.
எளிமையின் சிகரமாக எல்லோருடனும் அன்பாகவும் பண்பாகபவும் பழகும் இவர், ஈஸி24நியூஸ் தளம் வாயிலாக ஈழத் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் இனப்போராட்டத்தை உலக அரங்கில் கொண்டு சேர்க்கின்றார்.
ஊடகப் போராளிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
ஈஸி24நியூஸ் குழுமம்