கிளிநொச்சி மாவட்டத்தில் தற்போது அறுவடை செய்கின்ற நெல்லை உரிய விலைகளில் சந்தைப்படுத்த முடியாத நிலைகானப்படுவதாக விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர்
கிளிநொச்சி மாவட்டத்தில் தற்போது காலபோக அறுவடை ஆரம்பித்துள்ள நிலையில் எற்கனவே வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் அறுவடை செய்கின்ற நெல்லை சந்தைப்படுத்துவதிலும் அதற்கான நிர்ணய விலையின்றியும்; பெரும் நட்டத்தை எதிர்கொள்கின்றனர்.
அறுவடைகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் கிளிநொச்சி மாவட்டத்தில் விவசாயிகளிடமிருந்து நெல்லைக்கொள்வனவு செய்வதற்கான எந்த நடவடிக்கைகளும் இதுவரை முன்னெடுக்கப்படவில்லை இதனால் சிகப்பு நெல் ஒரு மூடை மூவாயிரம் ரூபாவிற்கு கொள்வணவு செய்யப்பட்ட நிலையில் 75கிலோ கொண்ட சிகப்ப நெல் 1750 ரூபாவிற்கும் 4000ரூபா வரையில் விற்பனை செய்யப்பட்ட சம்பா மற்றும் வெள்ளை நெல் ஒரு மூடை 3000ரூபா வரையில் தணியார் வர்த்தகர்களால் கொள்வனவு செய்யப்படுகின்றது.
அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக பெருமளவான அழிவுகளை எதிர் கொண்ட விவசாயிகள் தற்போது அறுவடைசெய்கின்ற நெல்லுக்கு உரிய விலையின்றி அதனால் மேலும் நட்டத்தை எதிர் நோக்குவதாக கவலைதெரிவித்துள்ளனர்.
அறுவடைசெய்யும் நெல்லை இதுவரை நெல் சந்தைப்படுத்தும் சபையினூடாகவோ அல்லது பலநோக்கு கூட்டுறவுச் சங்கங்களினூடாகவோ நிர்ணய விலையில் நெல்லைக்கொள்வனவு செய்வதற்கு எந்த நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லை என்றும் விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.