இருபதுக்கு 20 உலகக் கிண்ண தகுதிகாண் சுற்றின் இறுதிப்போட்டியில் நேற்று இடம்பெற்ற போட்டியில் இலங்கை மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதின.
இப்போட்டியில் நெதர்லாந்து அணியை 10 ஓவர்களுக்குள் சுருட்டிய இலங்கை அணி வெறும் 44 ஓட்டங்களுக்குள் அனைத்துவிக்கெட்டுக்களையும் வீழ்த்தி 8 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.
இந்தப் போட்டியில் நாணயச்சுழற்சியில் செற்றிபெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் துடுப்பெடுத்தடிாய நெதர்லாந்து அணி இலங்கை அணியின் சுழலில் சிக்கி சின்னாபின்னமாகியது.
முதல் விக்கெட்டுக்காக மெக்ஸ் ஓ டௌட் 2 ஓட்டங்களுடன் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
இதனைத் தொடர்ந்து வந்த ஏனைய வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுக்க 10 ஓவர்களில் 44 ஓட்டங்களுக்கு நெதர்லாந்து அணி சுருண்டது.
இலங்கை அணி சார்பாக பந்துவீச்சில் மிரட்டிய வனிந்து ஹசரங்க மற்றும் லஹிரு குமார ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். மகேஷ் தீக்ஷன 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதனையடுத்து மிகவும் சுலபமான ஓட்ட இலக்கை விரட்ட துடுப்பெடுத்தாடிய இலங்கை அணியின் ஆரம்பத்துடுப்பாட்ட வீரரான பதும் நிஷங்க ஓட்டமேதனையும் பெறாமல் ஆட்டமிழந்து வெளியேறி அதிர்ச்சியளித்தார்.
அதன்பின்னர் வந்த சரித் அசலங்கவும் 6 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து வெளியேற, குசல் ஜனித் பெரேரா 33 ஓட்டங்களைப் பெற இலங்கை அணி 7.1 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 45 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]