Tuesday, August 26, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

நெதர்லாந்து நமீபியாவை வென்றது | இலங்கையின் நிலை என்ன?

October 18, 2022
in News, Sports
0
முன்னாள் உலக சம்பியன் இலங்கையை வீழ்த்தி வரலாறு படைத்தது நமிபியா

அவுஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் ஐசிசி இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட்டில் ஏ குழுவுக்கான முதலாவது சுற்றில் தனது 2ஆவது வெற்றியை ஈட்டிய நெதர்லாந்து, சுப்பர் 12 சுற்றுக்கு தகுதிபெறுவதற்கான தனது வாய்ப்பை அதிகரித்துக்கொண்டுள்ளது.

மெல்பர்ன், ஜீலோங் கார்டினியா பார்க் விளையாட்டரங்கில் இன்று செவ்வாய்க்கிழமை (18) நடைபெற்ற நமிபியாவுடான போட்டியில் 5 விக்கெட்களால் நெதர்லாந்து வெற்றிபெற்றது.

இரண்டு அணிகளும் மோதிக்கொண்ட இப் போட்டியில் நமிபியாவை சகல துறைகளிலும் விஞ்சும் வகையில் விளையாடிய நெதர்லாந்து மிகவும் அவசியமான வெற்றியை ஈட்டிக்கொண்டது.

நமிபியாவினால் நிர்ணயிக்கப்பட்ட 122 ஓட்டங்கள் என்ற சுமாரான வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்தெடுத்தாடிய நெதர்லாந்து, ஓவர்களில் 19.3 விக்கெட்களை இழந்து 122 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

Vikramjit Singh gets down to sweep, Namibia vs Netherlands, T20 World Cup 2022, First Round, Geelong, October 18, 2022

மெக்ஸ் ஓ’டவ்ட், விக்ரம்ஜித் சிங் ஆகிய இருவரும் 8.2 ஓவர்களில் 59 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.

முதலாவதாக ஆட்டம் இழந்த விக்ரம்ஜித் சிங் 31 பந்துகளில் 3 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 39 ஓட்டங்களைப் பெற்றார்.

தொடர்ந்து 2ஆவது விக்கெட்டில் பாஸ் டி லீடுடன் 2ஆவது விக்கெட்டில் மேலும் 33 ஓட்டங்களைப் பகிர்ந்த மெக்ஸ் ஓ’டவ்ட் 35 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார்.

மொத்த எண்ணிக்கை 101 ஓட்டங்களாக இருந்தபோது டொம் கூப்பர் (6), கொலின் அக்கர்மன் (0) ஆகிய இருவரும் ஒரே ஓவரில் ஆட்டமிழந்தனர்.

மொத்த எண்ணிக்கைக்கு மேலும் 4 ஓட்டங்கள் மாத்திரம் சேர்ந்தபோது அணித் தலைவர் ஸ்கொட் எட்வேர்ட்ஸ் (1) களம் விட்டகன்றார்.

Tim Pringle and Bas de Leede walk off the field after the chase, Namibia vs Netherlands, T20 World Cup 2022, First Round, Geelong, October 18, 2022

எனினும் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடிய பாஸ் டி லீட் ஆட்டமிழக்காமல் 30 ஓட்டங்களைப் பெற்று நெதர்லாந்தின் வெற்றியை உறுதி செய்தார். டொம் ப்ரிங்ள் 8 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதிருந்தார்.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட விரும்பிய நமிபியா 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 121ஓட்டங்களைப் பெற்றது.

ஆரம்ப வீரர் டிவான் டி கொக் (0) 2ஆவது ஓவரில் ஆட்டமிழந்ததால் நமிபியாவின் ஆரம்பம் சிறப்பாக அமையவில்லை.

எனினும் அடுத்து ஜோடி சேர்ந்த மைக்கல் வன் லிங்கென் (20), ஸ்டெஃபான் பார்ட் (19) ஆகிய இருவரும் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடி மொத்த எண்ணிக்கையை 30 ஓட்டங்களாக உயர்த்தியபோது வன் லிங்கென் ஆட்டமிழந்தார்.

Tim Pringle struck early for the Netherlands, Namibia vs Netherlands, T20 World Cup, First Round, Geelong, October 18, 2022

மொத்த எண்ணிக்கைக்கு மேலும் 2 ஓட்டங்கள் மாத்திரம் சேர்நத நிலையில் ஜான் நிக்கல் (0) களம் விட்டகன்றார்.

எனினும் இலங்கைக்கு எதிரான போட்டியில் துடுப்பாட்டத்தில் பிரகாசித்து ஆட்டநாயகனான ஜான் ஃப்றைலின்க் மீண்டும் அணியை மீட்டெடுப்பதில் பங்காற்றினார்.

ஸ்டெபான் பார்டுடன் 4ஆவது விக்கெட்டில் 31 ஓட்டங்களையும் அணித் தலைவர் கேர்ஹார்ட் இரேஸ்முஸுடன் 5ஆவது விக்கெட்டில் 41 ஓட்டங்களையும் ஜான்  ஃப்றைலின்க் பகிர்ந்து அணியை வீழ்ச்சியிலிருந்து மீட்டார்.

ஃப்றைலின்க் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 43 ஓட்டங்களைப் பெற்றார். அவருக்கு பக்கபலமாக துடுப்பெடுத்தாடிய ஸ்டெஃபான் பார்ட் 19 ஓட்டங்களையும் ஜேர்ஹார்ட் இரேஸ்முஸ் 16 ஓட்டங்களையும் பெற்றனர்.

டேவிஸ் வைஸ் 11 ஓட்டங்களுடனும் ஜொஹானெஸ் ஸ்மித் 4 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

நெதர்லாந்து பந்துவீச்சில் பாஸ் டி லீட் 18 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

Previous Post

யுப்புன் அபேகோனுக்கு சிறந்த வரவேற்பு!

Next Post

இலங்கை வருகிறது ஆப்கானிஸ்தான்

Next Post
இலங்கை வர ஆப்கானிஸ்தான் அணிக்கு தலிபான்கள் அனுமதி

இலங்கை வருகிறது ஆப்கானிஸ்தான்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures