கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் குறித்த கருத்திட்டமான பருவ கால நன்னீர் மீன் வளர்ப்பை அபிவிருத்தி செய்யும் நோக்கில் சுமார் 75,000 மீன் குஞ்சுகள் நெடுந்தீவு நீர் நிலைகளில் விடப்பட்டுள்ளன.
குறித்த கருத்திட்டமானது தேசிய நீர்வாழ் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் வெற்றிகரமாக செயற்படுத்தப்பட்டுள்ளது.
தேர்ந்தெடுக்கப்பட்ட நீர்நிலைகளில் மீன் குஞ்சுகளை இறக்கிவிடும் திட்டம் ஞாயிற்றுக் கிழமை கடற்படையினரின் ஒத்துழைப்புடன் நடைபெற்ற நிலையில், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பிரதிநிதியாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வேலும்மயிலும் குகேந்திரன் கலந்து கொண்டு திட்டத்தினை ஆரம்பித்து வைத்தார்.

