முற்போக்கு முன்னணியின் மேல் மாகாண இளைஞா் அமைப்பு, மேல் மாகாண சபை உறுப்பினர் குகவரதன் தலைமையில் வெற்றி விழா ஒன்றை பம்பலப்பிட்டி கதிரேசன் மண்டபத்தில் ்அண்மையில் ஏற்பாடு செய்திருந்தது.
நுவரேலியாவில் மேலும் 4 பிரதேச சபைகளைப் பெற்றுக் கொடுத்தமைக்காக தமிழ் முற்போக்கு முன்ணனியின் தலைவா் அமைச்சா் மனோ கனேசன், உப தலைவா் அமைச்சா் திகாம்பரம் ஆகியோரை பாராட்டி கௌரவித்தனா். அத்துடன் உற்சாகமூட்டி மலையக மக்களது பல குறைபாடுகள் முன்வைக்கப்பட்டன.
இந் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் தொண்டா்கள் என பலரும் கலந்து கொண்டனா். அத்துடன் இசை நிகழ்ச்சியும் இடம் பெற்றது.