நுவரெலியா வசந்தகால கொண்டாட்டங்களில் பிரதான அம்சமான குதிரை ஓட்டப் போட்டி பெருந்திரளான பார்வையாளர்கள் மத்தியில் நுவரெலியா குதிரைப்பந்தயத் திடலில் கடந்த வார இறுதியில் நடைபெற்றது.
றோயல் டேர்வ் கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட குதிரை ஓட்டப் போட்டியில் பிரதான போட்டியான ஆளுநர் கிண்ண போட்டியில் கே. சாய் கிரானினால் ஓட்டப்பட்ட எனதர் ஏஸ் என்ற குதிரை வெற்றியீட்டியது.
இதேவேளை மற்றொரு பிரதான போட்டியான இராணி கிண்ண குதிரை ஓட்டப் போட்டியில் நிக்கில் பார்மரினால் செலுத்தப்பட்ட றோயல் கிறிஸ்டல் என்ற குதிரை வெற்றிபெற்றது.
நுவரெலியா வசந்தகால கொண்டாட்டத்தில் குதிரை ஓட்டப் போட்டிகள் நிப்பொன் பெய்ன்ட்ஸ் அனுசரணையுடன் நடத்தப்பட்டன. 5 வெவ்வேறு கிண்ணங்களுக்காக போட்டிகள் நடத்தப்பட்டதுடன் போட்டிகள் யாவும் விறுவிறுப்பை தோற்றுவிப்பதாக அமைந்தன.
சுற்றுலாத்துறை மற்றும் காணி அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ பிரதம அதிதியாக கலந்துகொண்டு பிரதான பரிசில்களை வழங்கினார்.
குதிரை ஓட்டப் போட்டி முடிவுகள்
ஆர் ரீ சி ஆளுநர் கிண்ண குதிரை ஓட்டப் போட்டி
1ஆம் இடம்: எனதர் ஏஸ் (கே. சாய் கிரண் – குதிரையோட்டி, எஸ்.வி. மதியழகன் – பயிற்றுநர், ஹசங்க ஜயரட்ன – உரிமையாளர்)
2ஆம் இடம்: வெஸ்;டர்ன் விண்ட் (கே. விவேக் – குதிரையோட்டி, எஸ். வி. மதியழகன் – பயிற்றுநர், ஹசங்க ஜயரட்ன மற்றும் பபா ஜயரட்ன – உரிமையாளர்கள்)
3ஆம் இடம்: லெஜெண்டரி பிறின்சஸ் (நிக்கில் பார்மர் – குதிரையோட்டி, எஸ். டி. மஹேஷ் – பயிற்றுநர், டக்மார் வோல் – உரிமையாளர்).
ஆர். ரி. சி. இராணி கிண்ண குதிரை ஓட்டப் போட்டி
1ஆம் இடம்: றோயல் கிறிஸ்டல் (நிக்கல் பார்மர் – குதிரையோட்டி, எஸ். டி. மஹேஷ் – பயிற்றுநர், எட்வேர்ட்ஸ் ஸ்டேப்ள்ஸ்)
2ஆம் இடம்: ஹியர் அண்ட் நவ் (எல். ரவி குமார் – குதிரையோட்டி, எஸ். டி. மஹேஷ் – பயிற்றுநர், எஸ். என். ஹரிஷ் – உரிமையாளர்)
3ஆம் இடம்: கொஸ்மிக் ஃபீலிங் (பீ. அஜித் குமார் – குதிரையோட்டி, எஸ். டி. மஹேஷ் – பயிற்றுநர், எஸ்.எல்.என். இன்ஃப்ராஸ்ட்ரக்சர்ஸ் – உரிமையாளர்)
நிப்பொன் சுப்பர் சவால் கிண்ணம்
1ஆம் இடம்: ஃபேன்சி ஃபேஸ் (எம். இசாஹான் – குதிரையோட்டி, எல்.எம். பிரசன்ன நிரோஷன் – பயிற்றுநுர, நவீன் மாதவ மற்றும் சஞ்சயா குமாரசிங்க – உரிமையாளர்கள்)
2ஆம் இடம்: மாலீ (ஜீ. பியூகன் – குதிரையோட்டி, ஜயன்த விஜேசிங்க – பயிற்றுநர், ஆர்.எம்.ஏ. ஜயதிஸ்ஸ – உரிமையாளர்)
3ஆம் இடம்: க்றவுண் ஃப்றைட் (எச். சிவகுமார் – குதிரையோட்டி, பிரசன்ன நிரோஷன் – பயிற்றுநர், நிரஞ்சி சிவகுமார் – உரிமையாளர்)
ஸ்போர்ட்டிங் டைம்ஸ் சவால் கிண்ணம்
1ஆம் இடம்: அட்மிரல் நெல்சன் (கே. சாய் கிரண் – குதிரையோட்டி, எஸ்.வி. மதியழகன் – பயிற்றுநர், ஹசங்க, பபா ஜயரட்ன – உரிமையாளர்கள்)
2ஆம் இடம்: ஸ்ட்ரீட் கெட் (கே. சாய் கிரண் – குதிரையோட்டி, பிரசன்ன நிரோஷன் – பயிற்றுநர், காமினி ஜயரட்ன, ஜே.ஆர்.எஸ். இருகுலபண்டார – உரிமையாளர்கள்)
3ஆம் இடம்: க்ராபி (நிக்கில் பார்மர் – குதிரையோட்டி, எஸ்.டி. மஹேஷ் – பயிற்றுநர், எட்வேரட்ஸ் ஸ்டேப்ள்ஸ் – உரிமையாளர்)
ஸ்போர்ட்டிங் ஸ்டார் சவால் கிண்ணம்
1ஆம் இடம்: க்ரெக் ஒவ் டோன் (ரவி குமார் – குதிரையோட்டி, எஸ்.டி. மஹேஷ் – பயிற்றுநர், டக்மார் வோல் – உரிமையாளர்)
2ஆம் இடம்: குவீன்ஸ் ஹோல் (கே. சாய் கிரண் – குதிரையோட்டி, எஸ்.வி. மதியழகன் – பயிற்றுநர், ஹசங்க, பபா ஜயரட்ன – உரிமையாளர்கள்)
3ஆம் இடம்: கோட்ஸ்வேர்ட் (பி. அஜித் குமார் – குதிரையோட்டி, எஸ். டி. மஹேஷ் – பயிற்றுநர், எட்வேர்ட்ஸ் ஸ்டேப்ள்ஸ் – உரிமையாளர்)