எதிர்காலத்தில் ஏற்படவுள்ள நீர் பிரச்சினையை முகாமை செய்யும் நோக்கோடு பச்சிலைப்பள்ளி பிரதேச சபையினால் பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.
இதன் ஒருபகுதியாக பிரதேசத்தின் நிலத்தடி நீரை பாதுகாக்கும் நோக்கோடு ஆழ்துளைக் கிணறுகளை பிரதேசசபை எல்லைக்குள் அமைப்பவர்களுக்கு அதுதொடர்பான விழிப்புணர்வுகளை வழங்குவதுடன் உரிய திணைக்களங்களின் அனுமதியின்றி இயந்திரங்களின் மூலம் ஆழ்துளைக் கிணறுகளை அமைப்பவர்களுக்கு தண்டப்பணம் அறவிடப்படும் அதேநேரம் அவர்கள் சட்டநடவடிக்கைக்கும் உட்படுத்தப்படுவார்கள் என சபையின் தவிசாளர் சுப்பிரமணியம் சுரேன் தெரிவித்துள்ளார்.

