நீர்கொழும்பு, பெரியமுள்ள பிரதேசத்தில் உள்ள கட்டிடம் ஒன்றின் கொங்கிரீட் தட்டு இடிந்து விழுந்ததில் முன்று பேர் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களில் இருவர் நீர்கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இடிபாடுகளில் சிக்கியுள்ள மற்றொரு நபரை மீட்பதற்கான நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.