நீரிழிவு நோய்க்கு சிகிச்சை பெறுவதற்காக கடந்த தினம் தெம்பரவெவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட திஸ்ஸமஹாராம ரபர்வத்த பிரதேசத்தை சேர்ந்த நபர் ஒருவர் மூச்சித் திணறல் காரணமாக பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார்.
பின்னர் அடுத்த நாள் அவர் உயிரிழந்த நிலையில் சில தினங்களுக்கு பின்னர் வௌியான பிசிஆர் முடிவுகளில் அவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.
இது தொடர்பில் அவர்களின் உறவினர்களுக்கு தெரியப்படுத்துவதற்காக திஸ்ஸமஹாராம பொது சுகாதார பரிசோதகர்கள் நேற்று (08) அவரது வீட்டிற்கு சென்றிருந்த போது உறவினர்கள் கடும் எதிர்ப்பினை தெரிவித்திருந்தனர்.
´இவர் உயிரிழந்து 4 நாட்கள் ஆகியுள்ளன. இன்றுதான் பிசிஆர் முடிவு வௌியாகியுள்ளது. சடலம் கிடைக்கும் வரை நாம் பார்த்துக் கொண்டுள்ளோம். கடைகளுக்கு பொருட்கள் வாங்க சென்றோம். மக்கள் கூடிய பின்னர் இப்பொழுது வந்து கூறுகிறார்கள் கொரோனா உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று´. என உறவினர்கள் தெரிவித்தனர்.