கொழும்பு நகரில் நேற்று மாலை பெய்த அடை மழை காரணமாக பல வீதிகள் நீரில் மூழ்கியமையினால் மக்கள் கடும் சிரமத்திற்கு முகங்கொடுத்துள்ளனர்.
பிற்பகல் 2.30 மணியளவில் ஆரம்பித்த மலை மாலை 5.30 மணிவரை பெய்துள்ளது. கடந்த 3 மணித்தியால காலப்பகுதியில் 122 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி கொழும்பில் பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
துன்முல்லை, வோட் பிளேஸ், கிங்சி வீதி மற்றும் பேஸ்லைன் வீதி உள்ளிடட் மேலும் பல வீதிகள் இவ்வாறு நீரில் மூழ்கியுள்ளன.
இதன் காரணமாக கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.