தனுஷ் கோலிவுட், பாலிவுட் தாண்டி தற்போது ஹாலிவுட் செல்லவுள்ளார். இந்நிலையில் நேற்றுடன் தனுஷ் சினிமாவில் காலடி எடுத்து வைத்து 15 வருடங்கள் ஆகிவிட்டது.
இதனால், பலரும் இவருக்கு வாழ்த்துக்களை கூறி வர, அவரும் அதற்கு தன் நன்றியை தெரிவித்து வருகின்றார்.
ரசிகர்கள் பலரும் தனுஷ் குறித்து சிறப்பு வீடியோ தயார் செய்து வெளியிட்டனர், அப்போது தனுஷின் பழைய பேட்டி ஒன்றில் அவரின் உருவம் குறித்து பலரும் கிண்டல் செய்ததாக அவரே கூறியுள்ளார்.
மேலும், நீயெல்லாம் நடிகனா? என்று கூட கேட்டார்கள், அந்த சமயத்தில் அப்பா, அம்மா, அண்ணன் கொடுத்த நம்பிக்கையே என்னை இங்கு வரை உயர வைத்துள்ளது என்று கூறியுள்ளார்.
தனுஷ் திரையுலகத்திற்கு வந்து 15 வருடங்கள் ஆக அவர் இன்று போல் என்றும் உச்சத்தில் பறக்க சினிஉலகம் சார்பாக வாழ்த்துக்கள்.