இலங்கையில் அரசியல் கைதிகள் என்று எவரும் இல்லை என நீதி அமைச்சர் தலதா அதுகோரல தெரிவித்துள்ள கருத்து தவறானது என வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சிறைச்சாலைகளில் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் குறித்து இன்றைய தினம் பொது அமைப்புக்களுடன் சந்திப்பு இடம்பெற உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்பு இன்று முற்பகல் 11.00 மணியளவில் கைதடியில் அமைந்துள்ள முதலமைச்சரின் அலுவலகத்தில் இடம்பெறவுள்ளது