வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பிற்போடப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு விசாரணைகள் ஒக்டோபர் மாதம் 16ஆம் திகதி வரை பிற்போடப்பட்டுள்ளதாக மேல்முறையீட்டு நீதிமன்றம் இன்று (செவ்வாய்க்கிழமை) அறிவித்துள்ளது.
வட.மாகாண முன்னாள் அமைச்சர் டெனிஸ்வரன் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த வழக்கு தொடர்பாக கடந்த 7 ஆம் திகதி நீதிமன்றில் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் முன்னிலையாகியிருந்தார்.
இதன்போது குறித்த மனு மீதான வழக்கை விசாரித்த நீதிபதி, இன்றைய திகதியில் மீண்டும் முன்னிலையாகுமாறு விக்னேஸ்வரனுக்கு உத்தரவு பிறப்பித்து வழக்கை ஒத்திவைத்திருந்தார்.
இந்நிலையிலேயே இன்று மேல்முறையீட்டு நீதிமன்றத்தால் குறித்த வழக்கு விசாரணைகள் பிற்போடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

