நீதிபதி கிஹான் பிலபிடியவிடம் கொழும்பு குற்றவியல் பிரிவு வாக்குமூலம் பதிவு செய்துள்ளது.
நேற்று மாலை நீதிபதி கிஹான் பிலபிடியவிடம் 5 மணி நேரம் வாக்குமூலம் பதிவு செய்ததாக கொழும்பு குற்றவியல் பிரிவு தெரிவித்துள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுடன் தொலைப்பேசி உரையாடல்களில் ஈடுபட்டமைக்காக வாக்குமூலத்தை பெற்றுக்கொள்ளுமாறு கொழும்பு குற்றவியல் பிரிவின் பணிப்பாளருக்கு சட்டமா அதிபர் உத்தரவிட்டிருந்தமைக்கு அமையவே இவ்வாறு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

