யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் நடத்தியமை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபரின் விளக்கமறியல் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர் யாழ். பதில் நீதவான் காயத்ரி சைலவன் முன்னிலையில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டார்.
இதன்போது சந்தேகநபரை அடுத்த மாதம் 4 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு பதில் நீதவான் காயத்ரி சைலவன் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த யூலை மாதம் 22 ஆம் திகதி யாழ்ப்பாணம் நல்லூர் பின் வீதி நாற்சந்தியில் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனை நோக்கியதான துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட நிலையில் நீதிபதியின் மெய்ப்பாதுகாவலராக செயற்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் உயிரிழந்ததுடன் மற்றுமொரு பொலிஸ் உத்தியோகத்தர் காயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.