கடந்த 2011ம்ஆண்டு ஆசிரியர் ஒருவரை கற்பழித்து கொலை செய்த குற்றத்துக்காக இருவருக்கு மரண தண்டனை வழங்கி திருகோணமலை மேல்நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் தீர்ப்பளித்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.
இதனுடன் தொடர்பு பட்டு குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில் குற்றவாழியாக இனம்காணப்பட்ட நகுலேஸ்வரன்(38),சந்திரபாலன் (28)ஆகிய இருவருக்கும் இத்தண்டனையை மேல்நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் வழங்கி தீர்ப்பளித்தார்.
இவ்வழக்கு மன்றில் நீண்ட நாட்களாக விசாரிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

