நீதிபதியொருவரால் பெண் சட்டத்தரணி ஒருவர் துஸ்பிரயோகத்திற்கு உள்ளான சம்பவமொன்று இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் பதிவாகியுள்ளது.
தெலுங்கானா மாநிலம் சூரியப்பேட்டையை சேர்ந்தவ மல்லிகா என்ற பெண் சட்டத்தரணி ஒருவரே இவ்வாறு துஸ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளார்.
இவர் அங்குள்ள நீதிமன்றத்தில் சட்டத்தரணியாக பணிபுரிந்து வருகிறார்.
அதே நீதிமன்றத்தில் நாராணராவ் என்பவர் நீதிபதியாக பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில் ஒரே நீதிமன்றத்தில் பணிபுரிந்த மல்லிகாவிற்கும் நாராணராவிற்கும் பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் அது காதலாக மாறியுள்ளது.
நாராண ராவ் மல்லிகாவை திருமணம் செய்வதாக ஆசைவார்த்தைகூறி அவரை பலமுறை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியுள்ளார்.
இதற்கிடையே நாராணராவ் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்ய இருப்பதை அறிந்த மல்லிகா அதிர்ச்சியடைந்து, இதுகுறித்து நாராணராவிடம் கேட்டுள்ளார்.
ஆனால் அவரோ மல்லிகாவை ஒரு பொருட்டாகவே கருதவில்லை.
இதனையடுத்து மல்லிகா காவல்நிலையத்தில் நீதிபதிக்கு எதிராக முறைப்பாடு செய்துள்ள நிலையில், முறைப்பாட்டை ஏற்ற காவற்துறையினர் நீதிபதி நாராணராவை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
ஒரு நீதிபதியே இப்படி கீழ்த்தரமாக நடந்து கொண்டிருப்பது இந்திய மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

