நீதிமன்ற சேவை அதிகாரிகள் 41 பேருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
வருடாந்த இடமாற்றத்தின் கீழ் நீதிச் சேவைகள் ஆணைக்குழு மூலம் இந்த இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளன.
அதன்படி மாவட்ட நீதிபதிகள், மேலதிக மாவட்ட நீதிபதிகள், நீதவான்கள், மேலதிக நீதவான்கள், உள்ளிட்ட 41 பேருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
குறித்த இடமாற்றங்கள் எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் அமுலுக்குவரும் என நீதிமன்ற சேவைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
.
இதேவேளை, வருடாந்த இடமாற்றத்தின் கீழ் இவ்வருடம் ஜனவரி மாதம் 70 இடமாற்றங்கள் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.