Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

நீண்ட நாட்களின் பின்னர் நாட்டின் நிலைமை தொடர்பில் மௌனம் கலைத்த மகிந்த

March 13, 2026
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
அரசாங்கத்திற்கு மகிந்தவின் சாட்டையடி பதில்!

 நாட்டின் நிலைமை என்னை விட மக்களுக்கு நன்றாகத் தெரியும் என்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். மத்திய கிழக்கில் நடக்கும் போர் நாட்டின் எதிர்காலத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும் முன்னாள் ஜனாதிபதி கூறினார்.

திஸ்ஸமஹாராமாவில் உள்ள சிறிமங்கல விஹாரையில் புதிதாக கட்டப்பட்ட சைத்திய ராஜ தேரரின் திறப்பு விழாவிற்குப் பிறகு பத்திரிகையாளர்களுடனான கேள்வி பதில் அமர்வின் போது அவர் இவ்வாறு கூறினார்.

கேள்வி: தற்போதைய அரசாங்கம் பௌத்த சாசனத்திற்கு ஆற்றும் சேவை குறித்து உங்களது கருத்து என்ன?

பதில்: ஏதேனும் சேவை செய்கிறார்களா?

கேள்வி: பௌத்த சாசனத்தை இரண்டாம் பட்சமாகக் கருதும் நிலை காணப்படுகிறது. உங்கள் காலத்தில் எப்படி மதிப்பளிக்கப்பட்டது?

பதில்: மிக உயர்வாக மதித்தோம். இப்போது அப்படிச் செய்கிறார்களா என்பது கேள்வியே.

கேள்வி: உங்கள் காலத்தில் இருந்த புலனாய்வுப் பிரிவு அதிகாரி ஒருவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இது குறித்து உங்கள் கருத்து என்ன?

பதில்: அவர் ஆற்றிய சேவையைப் பாராட்ட வேண்டுமே தவிர, சிறையில் அடைக்கக் கூடாது. இது சிறையில் அடைக்கும் காலமல்ல.

கேள்வி: தற்போது சர்வதேசப் போரொன்று நடைபெற்று வருகின்றது. இன்னும் சிறிது காலம் இந்தப் போர் தொடர்ந்தால் நாட்டின் எதிர்காலம் என்னவாகும் என நினைக்கிறீர்கள்?

பதில்: பிரச்சினை ஏற்படும் தானே. நாட்டிற்கு, நாட்டின் எதிர்காலத்திற்குப் பிரச்சினை ஏற்படும்.

என்னைவிட மக்களுக்கு நன்றாகத் தெரியும்

கேள்வி: நாட்டின் தற்போதைய நிலை குறித்து என்ன நினைக்கிறீர்கள்?

பதில்: அரசாங்கம் செய்வதைப் பற்றிச் சொல்வதற்கு ஒன்றுமில்லை. என்னைவிட மக்களுக்கு நன்றாகத் தெரியும்.

Previous Post

மீண்டும் அறிமுக இயக்குநருக்கு வாய்ப்பளிக்கும் சிவகார்த்திகேயன்

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures